6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை: தமிழக அரசு அரசாணை
அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் நோக்கில் அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடையை தமிழக அரசு விதித்துள்ளது.மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், குளோர்பைரிஃபாஸ் உள்பட 6 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்ளப் பயன்படுத்தப்படும் 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழகத்தில் நிரந்தரத் தடை விதிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
Related Tags :
Next Story