போலீசாரிடம் முன்அனுமதி பெற்று வாகனங்களில் செல்ல வேண்டும்


போலீசாரிடம் முன்அனுமதி பெற்று வாகனங்களில் செல்ல வேண்டும்
x

மாமன்னர் மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை நிகழ்ச்சிகளுக்கு வாகனங்களில் செல்பவர்கள் போலீசாரிடம் முன்அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை


மாமன்னர் மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை நிகழ்ச்சிகளுக்கு வாகனங்களில் செல்பவர்கள் போலீசாரிடம் முன்அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில்மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221-வது நினைவு தின அரசுவிழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது. 27-ந்தேதி, காளையார ்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் 30-ந்்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா நடக்கிறது.

இதையொட்டி இந்த நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

விதிமுறைகள்

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழா 24-ந்தேதி நடக்கிறது. திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் அவர்களின் திருவுருவச்சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, கவுரவிக்கப்பட உள்ளது. இதில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

அதேபோன்று, 27-ந் தேதி காளையார்கோவில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் மற்றும் 30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து செல்பவர்கள் எந்தவித சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளும் வராமல், அரசால் வகுக்கப் பட்டுள்ள விதிமுறைக்களுக்கு உட்பட்டு, அதனை அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

சிவகங்கை, ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள விழாக்களில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதியில்லை. மேலும் சொந்த நான்கு சக்கர வாகனங்களில் செல்லலாம்.

நான்கு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு உட்பட்ட துணைபோலீஸ் சூப்பிரண்டுகளிடம் உரிய தகவல்களை கொடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரசு பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பயணம் மேற்கொள்வதற்கான வழிவகையும் செய்யப்பட்டு உள்ளது.

நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் பயணம் மேற்கொள்பவர்களின் விவரங்கள் ஆகியவற்றை அந்தந்தப் பகுதிகளுக்கு உட்பட்ட துணை போலீஸ்சூப்பிரண்டுகளிடம் கொடுத்து உரிய அனுமதி பெறவேண்டும்.

அனுமதி இல்லை

மேலும், வாகனங்களின் மேற்கூரையில் கண்டிப்பாக பயணம் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு விதிமுறைகளை கடைப் பிடிக்காதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நடை பயணமாக சென்று அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. குறிப்பாக, பொது இடங்களில் விளம்பரங்கள் செய்யக ்கூடாது.

அனுமதிக்கப்பட்ட வழிப்பாதைகளில் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அனைத்துப்பகுதிகளிலும் நடை பெறும் நிகழ்வுகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story