564குளங்களில்வண்டல்மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் 564குளங்களில்வண்டல்மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள 564 குளங்கள், கண்மாய்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் தேர்வு செய்யப்பட்டு வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் வண்டல் மண் எடுக்கப்படும் அளவு உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
எனவே விவசாய பயன்பாட்டிற்காக மண் எடுக்க விண்ணப்பிப்பவர்கள் அவர்களின் பெயரில் அல்லது விவசாயம் செய்பவரின் பெயரில் கிராம கணக்குகளின் படிநிலங்கள் உள்ளது என்பதற்கு தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்த பிறகு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று விவசாயிகள் பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story