குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளூர் சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதி


குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளூர் சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதி
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளூர் சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளூர் சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

வேலை நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் சீசன் தொடங்குகிறது. குறிப்பாக மே முதல் வாரத்திலிருந்து மாவட்டத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்ததால் வாகன போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஏப்ரல் கடைசி வாரத்திலிருந்து இந்த மாதம் கடைசி வாரம் வரை குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய சுற்றுலா வாகன ஓட்டிகள், லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தனா். இருப்பினும் இதில் முடிவு ஏற்படாததால் குன்னூரிலுள்ள சுற்றுலா வாகன ஓட்டிகள் கடந்த 2 வார காலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

உள்ளூர் சுற்றுலா வாகனங்கள்

சுற்றுலா வாகன ஓட்டிகள் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரனிடம் உள்ளுர் வாகனங்களுக்கு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் அனுமதி அளிக்க வேண்டும் என்று முறையிட்டனர். இதன் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குன்னூரிலுள்ள 128 உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு அடையாள அட்டையுடன் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் நேற்று முதல் சுற்றுலா வாகன ஓட்டிகள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், சுற்றுலா துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story