ஆன் லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது
ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்டு ரோட்டில் கேரள மாநில லட்டரி விற்பனை செய்யபட்டு வருவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து செட்டியப்பனூர், ஜனதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாணியம்பாடி தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டியப்பனூர் கூட்டு சாலையில் மறைவான இடத்தில் நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் திருப்பத்தூரை அடுத்த தோரணம்பதி பகுதியை சேர்ந்த ராதா கிருஷ்ணன் (வயது 50) என்பதும், கேரள மாநில ஆன் லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்த ஆன் லைன் லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story