ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் வீதி உலா
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவில் வரதராஜ பெருமாள் வீதி உலா வந்தார்.
திண்டுக்கல்
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள இந்த கோவிலில் ஆடித் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சந்தனம், விபூதி, மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி வரதராஜ பெருமாள் ஆஞ்சநேயர் வாகனத்தில் வீதி உலா வந்தார். இதைத்தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story