திருத்துறையூரில் புதிய கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது பழங்கால பெருமாள் கற்சிலை கண்டெடுப்பு கோவில் கட்டி வழிபட கிராம மக்கள் முடிவு


திருத்துறையூரில்    புதிய கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது பழங்கால பெருமாள் கற்சிலை கண்டெடுப்பு    கோவில் கட்டி வழிபட கிராம மக்கள் முடிவு
x

திருத்துறையூரில் புதிய கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது பழங்கால பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே திருத்துறையூர் ஊராட்சியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்டுவதற்காக நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது 4 அடி உயரமுள்ள பழங்கால பெருமாள் கற்சிலை இருந்தது கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை வெளியே எடுத்து, கிராம மக்கள் அபிஷேகம் செய்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் கொடுத்த தகவலின் பேரில் பண்ருட்டி துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி மற்றும் வருவாய் துறையினர் நேரில் வந்து பெருமாள் சிலையை எடுத்துச் செல்ல முயன்றனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கிராம மக்கள், பழங்கால பெருமாள் சிலை எங்கள் ஊரில் கண்டெடுக்கப்பட்டதால் கோவில் கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர். இதையடுத்து பெருமாள் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டது.


Next Story