பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில்

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், சோகத்தூர் திம்மராய பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புலிக்கரை

தர்மபுரி அருகே புலிக்கரையில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும், உபகார பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வரதகுப்பத்தில் உள்ள வெங்கட்ரமண சாமி கோவில், செட்டிக்கரை பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோன்று அக்கமனஅள்ளி ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை வழிபாடுகள் நடந்தன. பின்னர் சாமி ஓம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும்

இதேபோன்று அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story