பெருந்துறை, சென்னிமலை, பவானி பகுதிகளில்கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி


பெருந்துறை, சென்னிமலை, பவானி பகுதிகளில்கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி
x

பெருந்துறை, சென்னிமலை, பவானி பகுதிகளில் கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினா்

ஈரோடு

பெருந்துறை, சென்னிமலை, பவானி பகுதிகளில் கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பெருந்துறை

ஈரோடு தெற்கு மாவட்டம் பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி தலைமை தாங்கி கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த இந்த மவுன அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்ரீம்சுப்பிரமணியம், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.சின்னச்சாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் எஸ்.எம்.பாலசுப்ரமணி, மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணைத்தலைவர் எம்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் டி.ஜி.கே.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நந்த கோபால், சித்திக்அலி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி பி.பி.நடராஜ், ஒன்றிய பிரதிநிதி எல்.ஐ.சி.பாலாஜி, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ், க.செ.பாளையம் பேரூராட்சி தலைவர் ஜி.கே.செல்வம், துணைத்தலைவர் சக்திகுமார், தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் பாலவிக்னேஷ், கணேசன், துர்க்காதேவி, அடைக்கலம் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னிமலை

இதேபோல் திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சி.பிரபு தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன் முன்னிலை வகித்தார்.

சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வாய்க்கால்புதூர், பசுவபட்டி பிரிவு, முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கே.ஜி.வலசு, சூளைப்புதூர், முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட குமராபுரி பஸ் நிறுத்தம், முகாசிப்பிடாரியூர் பஸ் நிறுத்தம், 1010 நெசவாளர் காலனி உள்ளிட்ட இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சதீஷ் என்கிற பி.சுப்பிரமணியம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கே.எஸ்.பி.ராஜேந்திரன், சி.கே.ஆறுமுகம், எஸ்.சவுந்தர்ராஜன், தோப்புக்காடு முருகேஷ், கோ.சு.சாமியாத்தாள், பிரஸ் ஆனந்த், சரளைக்காடு பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பவானி

பவானி அந்தியூர் பிரிவு சாலையில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சி. நாகராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் கலந்துகொண்டு கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், அவைத் தலைவர் ராஜமாணிக்கம், முன்னாள் நகராட்சி தலைவர் எம்.ஆர்.துரை, முன்னாள் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் என்.தவமணி, தி.மு.க. நகர துணை செயலாளர் ஆடிப்பெரு முருகேஷ், தி.மு.க. வக்கீல் செந்தில்குமரன், இலக்கிய அணி மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன், நகர பொருளாளர் செல்வராஜ், பிரதிநிதிகள் ராஜசேகர், நல்லசிவம், கவுன்சிலர்கள் சுப்பிரமணி, கவிதா மோகன், கவிதா உதயசூரியன், விஜய ஆனந்த், சந்தோஷ் கோகிலாம்பாள், நகர இளைஞர் அணி அமைப்பாளர் இந்திஜித் உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story