பெருந்துறை ஆர்.எஸ். அருகே மளிகை கடையில் பணம் திருடியவர் கைது
பெருந்துறை ஆர்.எஸ். அருகே மளிகை கடையில் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.
சென்னிமலை
பெருந்துறை ஆர்.எஸ் அருகே சானார்பாளையம் ரோஜா நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 52). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். தேவராஜ் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் தேவராஜ் கடையின் பூட்டு் உடைக்கப்பட்டு் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.3 ஆயிரத்து 200 திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.அப்போது அங்கு பொருட்கள் வைத்திருக்கும் பகுதியில் ஒருவர் படுத்திருந்ததை பார்த்தார். இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து வெள்ளோடு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் ஈரோட்டை சேர்ந்த தரணிதரன் என்பதும், இவருடன் மேலும் 2 பேர் உடன் வந்து மளிகை கடை பூட்டை உடைத்து பணம் திருடியதும், மற்ற 2 பேர் அங்கிருந்து தப்பித்து சென்றதும் தெரியவந்தது..இதைத்தொடர்ந்து தரணிதரனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.