பெருந்துறை பெண் தொழிலாளி கட்டையால் தாக்கி கொலை: கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு


பெருந்துறை பெண் தொழிலாளி கட்டையால் தாக்கி கொலை:  கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 4 Nov 2022 1:00 AM IST (Updated: 4 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

4 தனிப்படைகள் அமைப்பு

ஈரோடு

பெருந்துறையில் பெண் தொழிலாளியை கொலை செய்த கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து உள்ளனர்.

கொலை

பெருந்துறையில் உள்ள காஞ்சிக்கோவில் ரோடு திருவேங்கடம்பாளையம் புதூரை சேர்ந்தவர் ராஜா. இறந்துவிட்டார். இவருடைய மனைவி சாந்தா (வயது 57). இவர் தனது சொந்த ஊரை விட்டு வந்து பெருந்துறை சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் உள்ள காய்கறி விற்பனை மேடையில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இரவு தலையில் கட்டையால் தாக்கப்பட்டு சாந்தா படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

தனிப்படை அமைப்பு

இந்த நிலையில் கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிக்க ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மசூதா பேகம் (பெருந்துறை), சரவணன் (சென்னிமலை), ஜெயமுருகன் (அறச்சலூர்) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றனர்.

இவர்கள் கொலையான சாந்தா குறித்தும், அவருக்கு பழக்கமான நபர்கள் மற்றும் சந்தைப்பேட்டை வளாகத்தில் இரவு நேரத்தில் படுத்து தூங்குபவர்கள் உள்பட பலரிடம் விசாரித்து வருகிறார்கள். மேலும் சந்தைப்பேட்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story