பெருங்களத்தூர் மேம்பாலம் இன்று திறக்கப்படுகிறது..!


பெருங்களத்தூர் மேம்பாலம் இன்று திறக்கப்படுகிறது..!
x

பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலம் இன்று திறக்கப்படுகிறது.

சென்னை,

சென்னையின் நுழைவு வாயில் பகுதியான பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொது மக்கள் சாலையை கடக்க முடியாமல் பல இன்னல்களை சந்தித்தனர். இதன் மூலம் கடந்த 2019 ம் ஆண்டு ரூ.234 கோடி செலவில் நான்கு வழிதடத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணியானது கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் பாலம் கட்டும் பணி தொடந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஒருவழி பாதையாக வண்டலூரிலிருந்து தாம்பரம் வரக்கூடிய மேம்பாலபாதை மட்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது பாதையான பெருங்களத்தூரிலிருந்து சீனிவாசராகவ பகுதிக்கு செல்லக்கூடிய மேம்பால பணியானது கடந்த ஒரு மதத்திற்கு முன்னதாக முடிக்கப்பட்டது.

ஆனாலும் பாலம் இந்நாள் வரை திறக்கபடாமலே இருக்கிறது. இதனால் பெருங்களத்தூர் மக்கள் பாலத்தை சீக்கிரம் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, மின் இணைப்பு கிடைப்பதில் தாமதம் இருப்பதாகவும், பாலத்தில் சில பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதாகவும் கூறினர். இதையடுத்து பாலத்தின் பணியானது முழுமையாக முடிக்கப்பட்டது.

இந்நிலையில் பெருங்களத்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று ரெயில்வே மேம்பாலம் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. சென்னை பெருங்களத்தூர் - பீர்க்கன்காரணையை இணைக்கும் மேம்பாலம் இன்று திறக்கப்பட உள்ளது. சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.


Next Story