பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில்கும்பாபிஷேக விழாதிங்கட்கிழமை தொடங்குகிறது


பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில்கும்பாபிஷேக விழாதிங்கட்கிழமை தொடங்குகிறது
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில் கும்பாபிஷேக விழா திங்கட்கிழமை தொடங்குகிறது

தூத்துக்குடி

ஏரல்:

நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை 9 மணி முதல் 12 மணி வரை யஜமானர் வர்ணம், ஆச்சார்ய வர்ணம், வாஸ்து ஹோமம், திருவாதானம், சாற்றுமுறை கோஷ்டி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கும்ப பூஜை நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவாராதனம், மாலை 6 மணிக்கு அக்னி ப்ரணயனம் நடக்கிறது.

கும்பாபிஷேகம் பிப் 3-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான பரிவாரம் உள்ளிட்ட நிகழ்்சிகள் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 8.30 மணிக்கு கருடசேவை நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிவலோக நாயகி, செயல் அலுவலர் கோலமணிகண்டன் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.


Next Story