பெருங்குளம் பஞ்சாயத்து யூனியன்நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா


பெருங்குளம் பஞ்சாயத்து யூனியன்நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெருங்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

பெருங்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பொன்ராணி தலைமை தாங்கி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, பெருங்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முகத்தாய், கண்ணம்மா, முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story