பெருஞ்சாணி அணை நீர்மட்டம்30 அடியை நெருங்கியது


பெருஞ்சாணி அணை நீர்மட்டம்30 அடியை நெருங்கியது
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் மழை நீடிப்பதால் நீர்வரத்து தொடர்ந்ததால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 30 அடியை நெருங்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் மழை நீடிப்பதால் நீர்வரத்து தொடர்ந்ததால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 30 அடியை நெருங்கியது.

பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் சீதோஷ்ண நிலை குளிர்ச்சியாக மாறியுள்ளது. நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலையில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 35.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 627 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 646 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 30 அடியை நெருக்கியது. அதாவது அணையின் நீர்மட்டம் 29.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 141 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 20 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 3-ந் தேதி நீர்மட்டம் 17 அடியாக இருந்த நிலையில் கடந்த 6 நாட்களில் 12 அடி உயர்ந்துள்ளது.

சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.38 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 21 கன அடி தண்ணீர் வருகிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 26 அடியாக உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 26 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


Next Story