விளைபொருட்களுக்கு கூடுதல் கமிஷன்விவசாயிகள் புகார்


விளைபொருட்களுக்கு கூடுதல் கமிஷன்விவசாயிகள் புகார்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு கூடுதல் கமிஷன் கேட்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு கூடுதல் கமிஷன் கேட்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விற்பனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் நெல், மிளகாய், பருத்தி மற்றும் இதர தானியங்கள் நன்றாக விளைந்து உள்ளது. குறிப்பாக நெல், பருத்தியை விட மிளகாய் வரலாறு காணாத விலைக்கு விற்பனையாகி விவசாயிகளை மகிழ்ச்சியில் தள்ளி உள்ளது.

இதன்காரணமாக இந்த ஆண்டு நெல்லுக்கு மாற்றாக பருத்தி விவசாயம் செய்யும் முடிவில் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளதால் விவசாயிகள் நெல் உள்ளிட்ட மிளகாய், பருத்தி போன்றவற்றை கமிஷன் கடைகளில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். நெல்கொள்முதல் செய்தபோது விற்பனை செய்ய முடியாத விவசாயிகள் தற்போது தேவை கருதி கமிஷன் கடைகளை நாடிச்செல்கின்றனர். இவ்வாறு உற்பத்தி செய்தவற்றை விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் வியாபாரிகள் கூடுதல் கமிஷன் உள்ளிட்ட மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனு

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விவசாய அணி துணைசெயலாளர் கண்ணப்பன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட விளை பொருட்களை விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் வியாபாரிகள் 4 சதவீத கமிஷன் தொகைக்கு பதிலாக 8 சதவீத கமிஷன் பிடித்தம் செய்து வருகின்றனர்.

மேலும், சாக்குகளுக்கு 400 கிராம் மட்டுமே கழிக்க வேண்டிய நிலையில் ஒரு மூடைக்கு ஒரு கிலோ எடை என சாக்குகளுக்கு கழித்து வருகின்றனர். பெரும்பாலான கடைகளில் மின்னணு தராசு இருப்பதில்லை. எந்த கடைகளிலும் ரசீது தராமல் வெள்ளை தாளில்தான் எழுதி கொடுக்கின்றனர். குறிப்பாக பரமக்குடி பகுதிகளில் இந்த மோசடி அதிகஅளவில் நடைபெறுகிறது.

இதனை விவசாயத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதுபோன்ற மோசடிகளால் அரசுக்கு கெட்டபெயர் ஏற்பட்டு வருகிறது. மேலும், கமிஷன் கடைகளில் உரம், தீவனம், இரும்பு போன்ற அனைத்தும் விற்பனை செய்கின்றனர். இது 1985 உர கட்டுப்பாடு சட்டத்தின்படி குற்றமாகும். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.

உத்தரவு

எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முறையாக சென்றடைய உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த புகார் மனுவை தொடர்ந்து மேற்கண்ட மோசடி தொடர்பாக வருகிற 15-ந் தேதி பரமக்குடியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வியாபாரிகள், விவசாயிகள் கலந்துகொள்ளும் சமாதான கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Related Tags :
Next Story