நாமக்கல் மாவட்டத்தில் நாளை கந்துவட்டி தொடர்பான புகார்களை கொடுக்கலாம்-போலீஸ் சூப்பிரண்டு தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை கந்துவட்டி தொடர்பான புகார்களை கொடுக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
நாமக்கல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து புகார்கள் இருந்தால் அதனை நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளிடம் மனுக்களாக பொதுமக்கள் நேரடியாக கொடுக்கலாம். புகார் சம்பந்தமாக விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story