ஓசூர் மாநகர செயலாளர் பதவிக்கு மேயர் சத்யா விருப்ப மனு
தி.மு.க. உட்கட்சி தேர்தலில் ஓசூர் மாநகர செயலாளர் பதவிக்கு மேயர் சத்யா விருப்ப மனு கொடுத்தார்.
ஓசூர்:
தி.மு.க. உட்கட்சி தேர்தலையொட்டி, ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 4 பகுதிகளாக பிரித்து அண்மையில் பகுதி செயலாளர்கள் தேர்தல் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து மாநகர செயலாளர் பதவி மற்றும் நிர்வாகிகளுக்கான வேட்புமனு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தேர்தல் அதிகாரியும், மாநில விவசாய அணி துணை அமைப்பாளருமான அன்னியூர் சிவா, விருப்ப மனுக்களை வாங்கினார். இதில் ஓசூர் மாநகர செயலாளர் பதவிக்கு போட்டியிட மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், துணைமேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு, திம்மராஜ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். அவரை தவிர்த்து வேறு யாரும் மாநகர செயலாளர் பதவிக்கு போட்டியிடாத நிலையில், சத்யா, மாநகர செயலாளர் பொறுப்புக்கு போட்டியின்றி தேர்வாக உள்ளார்.