ஓசூர் ஹோஸ்டியா சங்க அலுவலகம் முன்பு உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க கூடாது-பிரகாஷ் எம்.எல்.ஏ.விடம், நிர்வாகிகள் மனு


ஓசூர் ஹோஸ்டியா சங்க அலுவலகம் முன்பு உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க கூடாது-பிரகாஷ் எம்.எல்.ஏ.விடம், நிர்வாகிகள் மனு
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் செயல்பட்டு வரும் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கத்தின் (ஹோஸ்டியா) சார்பில் தலைவர் வேல்முருகன் தலைமையில் இணை தலைவர் மூர்த்தி, முன்னாள் தலைவர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 2-வது சிப்காட் பகுதி அருகே ஹோஸ்டியா சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு மின்வாரியம் சார்பில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைத்து, தனியார் தொழிற்சாலைக்கு மின்விநியோகம் செய்யப்பட்ட உள்ளது. இதனால் சங்க அலுவலகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க கூடாது. பூமிக்கடியில் புதைவிடம் அமைத்து திட்டத்தை செயல்படுத்தலாம்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story