தந்தையின் உடலை கொண்டுவரக்கோரி மகள் மனு


தந்தையின் உடலை கொண்டுவரக்கோரி மகள் மனு
x

தந்தையின் உடலை கொண்டுவரக்கோரி மகள் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்தார்.

ராமநாதபுரம்


கமுதி அருகே உள்ள அ.பள்ளப்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு திருமணமாகி முத்துமாரி என்ற மனைவியும் 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவுக்கு சென்று தனியார் கம்பெனியில் சாலை போடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்குமுன் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் பரிதாபமாக பலியானார். ராஜேந்திரன் பலியான தகவல் இங்குள்ள அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்ததகவல் அறிந்து மனம் உடைந்து கதறி அழுத குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பலியான ராஜேந்திரனின் மகள் ராஜலெட்சுமி மற்றும் குடும்பத்தினர் சவுதி அரேபியாவில் விபத்தில் பலியான தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரியும், அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் இருந்து தகுந்த நிவாரண உதவி பெற்றுத்தரக் கோரியும், அரசின் சார்பில் நிவாரணம் வழங்க கோரியும் கண்ணீர் மல்க மனு அளித்தனர். அப்போது ராஜேந்திரனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Related Tags :
Next Story