காரைக்குடி- தூத்துக்குடி ரெயில் பாதையை அமைக்கக்கோரி எம்.பி.யிடம் மனு


காரைக்குடி- தூத்துக்குடி ரெயில் பாதையை அமைக்கக்கோரி எம்.பி.யிடம் மனு
x

காரைக்குடி- தூத்துக்குடி ரெயில் பாதையை அமைக்கக்கோரி எம்.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி.யிடம் பொதுநல கமிட்டி தலைவர் பரமஞானம், ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, வேம்பார் ஒன்றிய கவுன்சிலர் செல்லமணி, செல்லப்பாண்டி, நரிப்பையூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் ஆகியோர் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, வேம்பார், தருவைகுளம் வழியாக தூத்துக்குடி பகுதிக்கு ெரயில்வே புதிய பாதை அமைக்கப் படும் என அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதன்பின் தற்போது வரை அப்பணிக்கான எந்த ஒரு நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்த பகுதியில் ெரயில்வே பாதை அமைந்தால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் நாடாளுமன்றத்தில் இந்த பகுதியில் ெரயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும் என இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை வரும் கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும் என நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.


Related Tags :
Next Story