கணவர் உடலை மீட்கக்கோரி கலெக்டரிடம் பெண் மனு


கணவர் உடலை மீட்கக்கோரி கலெக்டரிடம் பெண் மனு
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இறந்த கணவரின் உடலை மீட்டு தரகோரி கலெக்டரிடம் பெண் மனு அளித்தார்.

சிவகங்கை


சிவகங்கையை அடுத்துள்ள பனங்காடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மனைவி இன்பவள்ளி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். ஆனந்தன் கடந்த 2021-ம் ஆண்டு துபாய் நாட்டில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஸ்டோர் கீப்பர் வேலைக்காக சென்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியுடன் செல்போனில் பேசிய ஆனந்தன் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனது பொறுப்பில் இருந்த பொருள் திருடு போனதாக கூறி என்னை போலீசார் மூலம் அடித்து துன்புறுத்தியதாக கூறி இருக்கிறார்.

இதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்து தகவல் கிடைத்து உள்ளது.. இதனை தொடர்ந்து இன்பவள்ளி தன்னுடைய குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டியை நேரில் சந்தித்து துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டு தரக்கோரி கண்ணீர் மல்க மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்ைக எடுப்பதாக உறுதி அளித்தார்.


Related Tags :
Next Story