பொதுபாதையில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு


பொதுபாதையில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:36 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே பொதுபாதையில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூர் ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் புதுப்பட்டி- லக்கபுரம் செல்லும் தார்சாலையில் இருந்து பொதுப்பாதை ஒன்று உள்ளது. இந்த பாதையில் சிலர் கற்களை அடுக்கியும், குழிகளை தோண்டியும் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர்.

இதனால் பொதுமக்கள் மற்றும் கோழிப்பண்ணை தொழிலாளர்கள் அவதி அடைந்து வருகிறோம். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் நேரில் ஆய்வு செய்து, கற்களை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து கற்களை அகற்றிவிட்டனர். ஆனால் குழிகள் மூடப்படாமல் இருந்து வருகிறது. எனவே குழிகளை சீரமைக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.


Related Tags :
Next Story