நார்சம்பட்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


நார்சம்பட்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x

நார்சம்பட்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பத்தூர்

கந்திலி அருகே உள்ள கும்மிடிகாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நார்சம்பட்டி ஊராட்சியில் உள்ளது. இந்த பள்ளி நார்சம்பட்டி ஊராட்சிக்கு வரி செலுத்த வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் நார்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கும்மிடிகாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நார்சம்பட்டி பகுதியில் உள்ளது. இந்தப் பள்ளியில் தொழில் வரி வசூலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின்படி திருப்பத்தூர் ஊராட்சிகள் உதவி இயக்குனர், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மூலம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தொழில் வரி கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பேரில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நார்சம்பட்டி ஊராட்சி, பள்ளி நிர்வாகத்தில் எப்படி தலையிட முடியும்.

நார்சம்பட்டி ஊராட்சி பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கும்மிடிகாம்பட்டி ஊர் பொதுமக்கள் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி உள்ளனர். அரசு விதிப்படிதான் நாங்கள் செயல்பட்டோம் என கூறி உள்ளனர்.


Next Story