கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் மனு


கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் மனு
x

கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.

விருதுநகர்


தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் சங்க உறுப்பினர் சந்திரசேகர் சாத்தூர் அருகே கம்மாபட்டியில் செம்மறி ஆட்டுகிடை போட்டுள்ளார். கடந்த 10-ந் தேதி 40 பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு வந்து ஆட்டுக்கிடையில் பாதுகாப்புக்கு இருந்த மாரிச்சாமி என்பவரை தாக்கியதோடு 18 ஆடுகளையும் திருடி சென்று விட்டனர். இதுதொடர்பாக இருக்கன்குடி போலீசாரிடம் புகார் கொடுத்த நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது. எனவே தாங்கள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சத்யம் ஸ்ரீ சரவணன் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Related Tags :
Next Story