மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு


மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
x

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. ஆனால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை எடுத்துக் கொள்ள கர்நாடக அரசு தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யவோ, எவ்வித உத்தரவுகளையும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பிக்கவோ தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Next Story