சீத்தப்பட்டி அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்டி தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு


சீத்தப்பட்டி அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்டி தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
x

சீத்தப்பட்டி அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்டி தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 321 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 59 மனுக்கள் பெறப்பட்டன.இதில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,30,800 மதிப்பில் செயற்கை கால்களும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7,88,500 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,700 மதிப்பில் காதொலி கருவிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,570- மதிப்பில் ஊன்றுகோல் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கட்டிடம் கட்டி தரக்கோரி மனு

இக்கூட்டத்தில் கரூர் மாவட்டம், கொடையூர், சீத்தப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-18.7.2017 அன்று எமது பள்ளி தரம் உயர்த்தப்பட்டு, அதே கட்டிடத்தில் உயர்நிலைப்பள்ளியாக செயல்படுகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் 67 பேரும், மாணவிகள் 60 பேரும் இந்த கல்வியாண்டில் படித்து வருகின்றனர். வகுப்பறையில் 4 வகுப்பு மாணவர்களும், வெளியே 4 வகுப்பு மாணவர்களும் பகல், மாலை வேலைகளில் தினம் அமர்ந்து மாறி, மாறி கல்வி கற்கும் சூழல் உள்ளது. எங்கள் கிராமம் வருவாய் இல்லாத கிராமம். எனவே நிலம் கண்டறிவதில் இடர்பாடு உள்ளது. எனவே கிராம சுற்றுப்புறத்தில் நிலம் கண்டறிந்து எங்கள் உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் மற்றும் விளையாட்டு திடல் உள்ளிட்ட வசதிகள் செய்து தர ஆவனம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story