பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மனு


பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மனு
x

பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை

பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமாரை, தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் மயில், அகில இந்தியச் செயலாளர் சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் செ.நா. ஜனார்த்தனன், மாயவன் உள்பட நிர்வாகிகள் பலர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில், ''தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதிய காலத்தில் 50 சதவிகிதம் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்தர ஆய்வகம் அமைக்க வேண்டும்'' என்பன உள்பட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.


Next Story