பள்ளிக்கல்வி ஆணையரிடம் தொழிற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகிகள் மனு


பள்ளிக்கல்வி ஆணையரிடம் தொழிற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகிகள் மனு
x

தொழிற்கல்வி ஆசிரியர்கள் பள்ிக்கல்வி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

வேலூர்

காட்பாடி

தொழிற்கல்வி சிரியர்கள் பள்ிக்கல்வி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தலைமை நிலைய செயலாளர் டி.மகேந்திரன், வேளாண் அறிவியல் ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.இளங்கோ உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:-

மேல்நிலை தொழிற்கல்வி பாடங்களை மறுசீரமைப்பு செய்து உடனடி வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் திறன் பயிற்சி அளிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டுகின்றோம்.

50 சதவீத தொகுப்பூதிய பணிக்காலம் ஓய்வூதியம் பெற கணக்கிட வழங்கப்பட்ட அரசாணையில் விடுபட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் தமிழக அரசு ஆணை வழங்க வேண்டும்.

முதுகலை ஆசிரியருக்கு இணையான ஊதியத்தை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.

தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றால் அப்பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படும் நிலை தடுக்கப்பட வேண்டும்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,000 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவில் கூறப்பட்டிருந்தது.

கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் உறுதி அளித்தார்.


Next Story