அம்பேத்கர் சிலையில் மனு கொடுக்கும் போராட்டம்
நெல்லை, வள்ளியூரில் அம்பேத்கர் சிலையிடம் மனு வழங்கி பா.ஜனதாவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, வள்ளியூரில் அம்பேத்கர் சிலையிடம் மனு வழங்கி பா.ஜனதாவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை
மத்திய அரசு பட்டியலின மக்களுக்கு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக செலவு செய்யவில்லை என்று கூறி, பா.ஜனதா பட்டியல் அணியினர் நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசிபாலா தலைமை தாங்கி, அம்பேத்கர் சிலையில் கோரிக்கை மனுவை வைத்தார். பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துபலவேசம், வேல்ஆறுமுகம், மாவட்ட செயலாளர் நாகராஜன், பட்டியல் அணி மாவட்ட செயலாளர்கள் தங்கராஜ், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களுக்காக ஒதுக்கப்படும் அரசு நிதியை அவர்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
வள்ளியூர்
இதேபோன்று வள்ளியூர் நீதிமன்ற வளாகம் முன்புள்ள அம்பேத்கர் சிலையிடம் தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் மனு வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பா.ஜ.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.