அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கேட்டு மனு


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கேட்டு மனு
x

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் மற்றும் அலங்காநல்லூர் நிர்வாகிகள் கலெக்டர் அனிஷ்சேகரிடம் நேற்று மனு அளித்தனர்.

மதுரை


பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். குறிப்பாக மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. இந்த போட்டிகள் நடைபெறுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி போட்டி நடத்துவதற்கு மாவட்ட கலெக்டர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அதன்படி மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் மற்றும் அலங்காநல்லூர் நிர்வாகிகள் கலெக்டர் அனிஷ்சேகரிடம் நேற்று மனு அளித்தனர். மேலும் அதில் போட்டிக்கான ஏற்பாடுகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றும், ஆன்லைனில் காளைகள் மற்றும் வீரர்கள் பதிவு நடைபெற வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.


Related Tags :
Next Story