மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி கலெக்டரிடம் மனு


மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி தொழிற்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி கோட்டக்கரை ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக மாட்டுவண்டியில் மணல் அள்ளி ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் அமைத்து பொதுப்பணித்துறையினர் மூலமாக ரசீது போட்டு தொழிலாளர்கள் பிழைத்து வந்தனர். இந்த மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலை நம்பி 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். இதன் பின்னர் மணல் அள்ள அனுமதி மறுக்கப்பட்டது. யாருக்கும் மணல் அள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த பகுதியில் லாரி, டிராக்டர், கனரக டிப்பர் லாரி போன்றவற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு பகலாக மணல் அள்ளி சென்று வருகின்றனர். ஆனால், மாட்டு வண்டியில் மட்டும் மணல் அள்ள அனுமதி மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனை கண்டித்து நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு வந்தனர். இவர்கள் உடனடியாக மணல் அள்ள அனுமதி வழங்க கோரி கோஷமிட்டனர். இதனை போலீசார் தடுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.


Related Tags :
Next Story