எரிமேடை மயானம் கோரி கோட்டாட்சியரிடம் மனு
எரிமேடை மயானம் கோரி கோட்டாட்சியரிடம் மனுஅ ளிக்கப்பட்டது.
திருச்சி
முசிறியை அடுத்த வாழவந்தி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியினருக்கான சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் இல்லை. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எரிமேடை மயானம் அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் எரிமேடு மயானம் அமைக்க கோரியும், மயானத்துக்கு பாதை வசதி செய்துதரக்கோரியும் கோட்டாட்சியர் மாதவனிடம் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story