தபால் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு


தபால் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தபால் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க.வினர் மனு அனுப்பினர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை:

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தபால் மூலம் மனு அனுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் உளுந்தூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தமிழ்வாணன் தலைமையில் 160 தபால் அனுப்பப்பட்டது. இதில் பா.ம.க. நிர்வாகிகள் அறிவழகன், முருகன், ராஜா, மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story