அர்ஜூன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மனு
அர்ஜூன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர்
இந்து மக்கள் கட்சி மாநிலத்தலைவர் அர்ஜுன் சம்பத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜபாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காக டெம்போ வாகனத்தில் சென்றோம். அப்போது நாங்கள் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி எங்கள் வாகனத்தை ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்தார். எங்களையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று, வழக்குபதிவு செய்தார். இந்த வழக்கு ராஜபாளையம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நாங்கள் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. எனவே ராஜபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு குறித்து போலீசார் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.