விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க ஆயுதங்கள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு


விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க ஆயுதங்கள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு
x

விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை,

என் பெற்றோர் 1947-ம் ஆண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்று குடியேறினர். நான் 1966-ம் ஆண்டு இலங்கையில் பிறந்தேன். கடந்த 2003-ம் ஆண்டு தமிழ்நாடு வந்து கல்பாக்கத்தில் தங்கியிருந்தேன். அப்போது, என் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கை தமிழ்நாடு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்பின்னர், கடந்த 2020-ம் ஆண்டு காஞ்சீபுரம் கியூ பிரிவு போலீசார் என் மீது மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்று திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டு இருந்தேன்.

விடுதலைப்புலிகள்

நான் ஒருபோதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தது கிடையாது. தற்போது இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளரான என் மீது தேசிய புலனாய்வு முகமை கடந்த டிசம்பர் 15-ந் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த ஜூலை மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் இயற்றிய தீர்மானத்தின் கீழ், சார்பு செயலாளர் ராஜீவ் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்கும் விதமாக என் தலைமையில் ஒரு கும்பல் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், போதைப்பொருளோ, ஆயுதமோ என்னிடம் இருந்து பறிமுதல் செய்யவில்லை. இந்த குற்றச் சம்பவம் எப்போது நடந்தது என்றும் குறிப்பிடவில்லை.

ரத்து

எந்த விவரங்களும், ஆதாரங்களும் இல்லாமல் மத்திய அரசு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்துள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story