பாலுக்கான பணத்தை பெற்று தரக்கோரி உற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் மனு


பாலுக்கான பணத்தை பெற்று தரக்கோரி உற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் மனு
x

பாலுக்கான பணத்தை பெற்று தரக்கோரி உற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களில் 15 பேர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் கற்பகத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், நக்கசேலத்தில் ஒருவர் பால் பண்ணை வைத்து முறைகேடு செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 6 மாத காலமாக பால் பணம் தராமல் தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, பாலுக்கான பணத்தை பெற்று தரக்கோரி ஏற்கனவே பாடாலூர் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பால் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இதேபோல் தேவேந்திர குலவேளாளர் மோடிஜி பாசறையை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தொண்டமாந்துறை கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.


Next Story