கல்வி அமைச்சரிடம் கோரிக்கை மனு


கல்வி அமைச்சரிடம் கோரிக்கை மனு
x

தொழிற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாநில தலைவர் சி.ரவிவர்மன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் இதயசெல்வன், மாநில துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் 10 ஆண்டுகள் பணிக்காலம் முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களை முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர் என பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும். ஊதிய உயர்வு பெற தகுதி உள்ள அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.


Next Story