கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதிக்குமாறு அமைச்சரிடம் மனு


கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதிக்குமாறு அமைச்சரிடம் மனு
x

கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதிக்குமாறு அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூருக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பெரம்பலூர் தர்ம பரிபாலன சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. அதில், பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், பூசாரி தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் வேப்பந்தட்டை தாலுகா மாவிலங்கை கிராமத்தில் உள்ள படைவெட்டி அம்மன் கோவிலில் பூஜை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.


Related Tags :
Next Story