உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு தாசில்தாரிடம் மனு
உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
அன்னவாசல்:
கிளிக்குடியில் இயங்கிவரும் தனியார் தொண்டு நிறுவனமான கிராம சேவா சங்கத்தின் மீதும், நெடுஞ்சாலை ஓரமாக உள்ள காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அகற்ற கோரியும், பாதுகாப்பற்ற கிணற்றை மூடக்கோரியும் கிளிக்குடி பொதுமக்கள் சார்பாக புகார் மனுக்கள் மாவட்ட கலெக்டர், சமூகநலத்துறை, தாசில்தார், நெடுஞ்சாலைத்துறை, கோட்டாட்சியரிடம் கொடுக்கப்பட்டன. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் நடவடிக்கை எடுக்க கோரி வருகிற 12-ந்தேதி காலை 10 மணி முதல் கிளிக்குடி பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கிளிக்குடி ஊராட்சி பொதுமக்கள் சார்பாக இலுப்பூர் தாசில்தாரிடம் மனு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story