காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி இளம்பெண் கண்ணீருடன் மனு


காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி  இளம்பெண் கண்ணீருடன் மனு
x

காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் கண்ணீருடன் மனு அளித்தார்.

வேலூர்


காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் கண்ணீருடன் மனு அளித்தார்.

இளம்பெண்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் மயில் (வயது 19). ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருக்கு முகநூலில் ஒருவர் அறிமுகமானார். அவரும், மயிலும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் இவர்களது திருமணத்துக்கு மணமகன் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் ஆம்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் மயிலின் கணவரை அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்தனர். அவரும் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலனின் குடும்பத்தினர் மயிலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

கண்ணீருடன் புகார் மனு

இந்தநிலையில் அந்த பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் கண்ணீருடன் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், என்னை காதல் திருமணம் செய்து கொண்ட கணவரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றபோது கணவரின் குடும்பத்தினர் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். எனது கணவரை மீட்டு தர வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், நடவடிக்கை எடுப்பதாக மயிலிடம் கூறி அனுப்பி வைத்தனர்.

===========


Next Story