வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்க மனுக்கள் கொடுக்கலாம்: கலெக்டர் தகவல்


வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்க மனுக்கள் கொடுக்கலாம்:  கலெக்டர் தகவல்
x

தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்க மனுக்கள் கொடு்க்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, தேனி மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகள் நடக்க உள்ளது. இந்த சீரமைக்கும் பணியின் போது கிராமப்புற, நகர்ப்புற வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகபட்சம் 1,500 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,500-க்கு மேல் இருந்தால், அந்த வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. மேலும், தற்போதுள்ள வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு இருந்தாலும், கட்டிடம் சிதிலம் அடைந்து இருந்தாலும், 2 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் வாக்குச்சாவடி அமைந்து இருந்தாலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுபோன்ற காரணங்களின் அடிப்படையில் துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்களை கொண்டு வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட உள்ள விவரங்கள் குறித்த விரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வருகிற 29-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே இதுகுறித்த மாற்றங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால், பொதுமக்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. அலுவலகம் அல்லது தாலுகா அலுவலகத்தில் மனுவாக அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story