பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
மனு நீதிநாள் முகாமை முன்னிட்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள நிலாவூரில் வருகிற 17-ந் தேதி மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது. இதில் 14 கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும், கோரிக்கைகளை மனுக்களாக பெற்று அதிகாரிகள் ஆய்வுக்குப் பின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இதனை ஒட்டி அர்த்தனாவூர் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர் ரவிமாராஜன், ஏலகிரிமலை கிராம நிர்வாக அலுவலர் சையது மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன், துணைத் தலைவர் திருமால், மக்கள் நல பணியாளர் சிவக்குமார் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story