சூளகிரியில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை?வாடிக்கையாளர்கள் முற்றுகையால் பரபரப்பு


சூளகிரியில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை?வாடிக்கையாளர்கள் முற்றுகையால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jun 2023 10:30 AM IST (Updated: 4 Jun 2023 7:58 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில், நேற்று விற்பனை செய்யப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருவதாக, வாடிக்கையாளர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று மாலை அங்கு 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், தண்ணீர் கலந்த பெட்ரோலை, பாட்டிலில் நிரப்பியவாறு திரண்டு வந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மற்றும் சூளகிரி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இரவு நீண்ட நேரம் இந்த பிரச்சினை நீடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story