தூத்துக்குடியில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு


தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. இதுதொடர்பாக இரண்டு மர்மநபர்களை போலீசார்தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றவர் வீடு உள்பட 2 இடங்களில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அந்த 2 மர்ம நபர்களை போலீசார்தேடிவருகின்றனர்.

பெட்ரோல் குண்டு

தூத்துக்குடி பெரிய கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரேகாதுரை. இவருடைய மகன் சந்தனராஜ் என்ற சாண்டல் (வயது 42). இவர் கடந்த வாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், சந்தனராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதேபோன்று மரக்குடி தெருவில் உள்ள அந்தோணிராஜ் என்பவர் வீட்டின் மீதும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றனர். இதில் வீட்டில் சிறிது தீப்பிடித்து சேதம் அடைந்து உள்ளது.

விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பும் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பெட்ெரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. தற்போது மீண்டும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story