சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x

சென்னையில் இன்று 3-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.

அதன்படி, சென்னையில் கடந்த 45 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் விலை கடந்த 22-ந் தேதி குறைந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 8 ரூபாய் குறைந்து 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைந்து 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று தொடர்ந்து 3-வது நாளாக அதே விலையில் மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story