கடலூரில்ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும்பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவு


கடலூரில்ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும்பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவு
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்


இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் போலீசார் மட்டுமின்றி, பல்வேறு துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் கடலூர் தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என தாசில்தார் தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட் கட்டாயம்

இதுதொடர்பாக கடலூர் தாசில்தார் விஜய்ஆனந்த் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடலூர் தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்குகளுக்கு, பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் நிரப்ப வேண்டும்.

மேலும் பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும் என்பதை குறிக்கும் வகையில் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகம் எழுதிய விழிப்புணர்வு பதாகைகளையும் பெட்ரோல் பங்க்குகளில் வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story