பெட்ரோல் பங்க் காசாளரை தாக்கிய 3 பேர் கைது
தஞ்சையில் பெட்ரோல் பங்க் காசாளரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்;
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா காடம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 47). இவர் தஞ்சை சீனிவாசம்பிள்ளை சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் காலி கியாஸ் சிலிண்டரை கொண்டு வந்த 3 பேர் கியாஸ் சிலிண்டரை நிரப்பி கேட்டு ராஜ்குமாரிடம் தகராறு ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதில் 3 பேரும் சேர்ந்து ராஜ்குமாரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து பாத்திமா நகரை சேர்ந்த டைசன்(19), பர்மா காலனியை சேர்ந்த சஞ்சய் குமார்(19), சிலோன் காலனியை சேர்ந்த ஜெயசூர்யா(20) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.