பெட்ரோல் பங்க் மேலாளருக்கு 2 ஆண்டு சிறை


பெட்ரோல் பங்க் மேலாளருக்கு 2 ஆண்டு சிறை
x

ரூ.40 லட்சம் கையாடல் செய்த பெட்ரோல் பங்க் மேலாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை


ரூ.40 லட்சம் கையாடல் செய்த பெட்ரோல் பங்க் மேலாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ரூ.40 லட்சம் கையாடல்

சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகாவில் முள்ளிப்பட்டு மற்றும் குன்னத்தூர் கிராமத்தில் பெட்ரோல் பங்குகளை கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடத்தி வந்து உள்ளார்.

இதில் திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

கார்த்திக் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 12 ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 2 பெட்ரோல் பங்குகளில் டீசல், பெட்ரோல் விற்பனை செய்த பணத்தை வங்கி கணக்கில் சரியாக செலுத்தாமல் ரூ.40 லட்சம் மோசடி செய்து கையாடல் செய்து உள்ளார்.

2 ஆண்டு சிறை தண்டனை

இதுகுறித்து சேகர் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை இன்று மீண்டும் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு கவியரசன் தீர்ப்பு கூறினார்.

அதில் பணம் கையாடல் செய்த கார்த்திக்கிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்தும் தீர்ப்பு கூறினார்.


Next Story