லஞ்ச வழக்கில் மருந்தாளுனருக்கு சிறை


லஞ்ச வழக்கில் மருந்தாளுனருக்கு சிறை
x
தினத்தந்தி 15 Aug 2023 1:45 AM IST (Updated: 15 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

லஞ்ச வழக்கில் மருந்தாளுனருக்கு சிறை தண்டனையை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு வழங்கியது.

மதுரை


திருமங்கலம், அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பிரபாகரன் என்பவர் பணியாற்றினார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு, பிரேத பரிசோதனை சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.800 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானார். இந்த வழக்கை மதுரையில் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், பிரபாகரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பாரதிராஜா நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story